நைட்டியுடன் அரசுப்பள்ளி ஆசிரியை... தீயாய் பரவிய வீடியோ.. கையோடு அதிரடி ஆக்ஷன்
- சாமிநாதபுரத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான விடுதியில், விடுதிக்கு சம்பந்தமில்லாத அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவர் நைட்டியுடன் உலா வந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சங்கரன் கோவில் கோட்டாட்சியர் கவிதா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. விடுதி காப்பாளர், மாணவர்கள் ஆகியோரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, விசாரணை அறிக்கையானது மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், விடுதி காப்பாளர் ராஜ்மோகனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் விடுதிக்கு வருகை புரிந்த ஆசிரியை மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.