பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான கொடுமைகளை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடிகை சனம் செட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். நவீன மங்கையர் பவுண்டேஷன் இணைந்து "கிளைம் தி நைட்'' எனும் பெயரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சனம் செட்டி, பாலியல் குற்றங்களில் தண்டனையை கடுமையாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.