போலீசாரை நடு ரோட்டில் தாக்கி அட்டூழியம் செய்த ரவுடிகள்... தீயாய் பரவிய வீடியோ..சேலத்தில் அதிர்ச்சி
சேலத்தில் மதுபோதையில் போக்குவரத்து காவலரை தாக்கி அராஜகத்தில் ஈடுபட்ட ரவுடிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் தில்லைநகர் பகுதியை சேர்ந்த ரவுடி பிரகாசம்.... தனது கூட்டாளிகள் 3 பேருடன் மதுபோதையில் பிரகாசம் காரில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது சாலையில் தனக்கு முன்னே பைக்கில் சென்ற நபர்களை கீழே தள்ளி கடுமையாக தாக்கியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவலரையும் வாகன ஓட்டிகளையும் போதை இளைஞர்கள் தகாத வார்த்தைகளில் திட்டி சரமாரியாக தாக்கினர்.