கொட்டும் மழையில் தார்ச்சாலையா?..கொந்தளிக்கும் மக்கள் - பரபரப்பு காட்சிகள்

Update: 2024-08-11 08:34 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், கொட்டும் மழையில் தார்ச்சாலை போடப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருத்தணி பை-பாஸ் ரவுண்டானா பகுதியில், சென்னை செல்லும் சாலை, திருப்பதி செல்லும் சாலை, அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலை போன்ற பகுதிகளில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத் துறை மூலம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் யாரும் இல்லாத நேரத்தில் இந்த சாலைகள் அமைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கொட்டும் மழையிலும், ஒப்பந்ததாரர் கடமை தவறாமல் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். தண்ணீர் தேங்கும் பகுதியில், தரம் இல்லாத சாலை அமைக்கும் ஒப்பந்ததாரரின் உரிமத்தை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்