சிலிண்டர்கள் ஏற்றி சென்ற குட்டி யானையில் கரும்புகை - நடுநடுங்கிப் போன மக்கள் | Kanchipuram
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கேஸ் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற டாட்டா ஏஸ் வாகனத்திலிருந்து திடீரென கரும்புகை வெளியேறி அப்பகுதி முழுவதும் சூழ்ந்தது. சிலிண்டர் ஏற்றி சென்ற வாகனத்தில் இருந்து இது போன்ற புகை வந்ததால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மத்தியில், திடீர் தீ விபத்து ஏற்படுமோ என்ற அச்சம் நிலவியது. நீண்ட நேரத்துக்கு பின் வாகனத்தில் டீசல் இல்லாத காரணத்தினால், கொஞ்சம் கொஞ்சமாக புகை அடங்கி சகஜ நிலைக்கு வந்ததால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.