பெண்களை அசிங்கமாக பேசிய தனியார் பஸ் டிரைவர் - சரியான பாடம் புகட்டிய தாய்மார்கள் | Thiruppur
அவிநாசியில் பெண் பயணிகளை அவமரியாதையாக டிரைவர் பேசியதால், தனியார் பேருந்து சிறை பிடிக்கப்பட்டது. கோவை காந்திபுரத்தில் இருந்து திருப்பூர் செல்லும் தனியார் பேருந்தில் 4 பெண்கள் ஏறி அவிநாசிக்கு டிக்கெட் கேட்டுள்ளனர். அப்போது, அவிநாசி பகுதிக்குள் பேருந்து செல்லாது என்ற பேருந்து டிரைவர் கனகராஜ், அவமரியாதையாகவும் பேசியுள்ளார். இதனால், அவிநாசி நகருக்குள் வந்த அந்த பேருந்தை, பயணிகளின் உறவினர்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஓட்டுநரை காவல்நிலையம் அழைத்துச் சென்று அறிவுரை வழங்கிய போலீசார், ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், ஓட்டுநர் உரிமத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தனர். பின்னர், பயணிகளிடம் டிரைவர் மன்னிப்பு கேட்டார்.