"சத்துணவில் விஷம் வைத்து விடுவேன்"பள்ளியில் சமையல் வேலை செய்யும் பெண் மிரட்டல்! வெடிக்கும் போராட்டம்

Update: 2024-08-05 16:06 GMT

ராமநாதபுரம் அருகே, திருவாடானை பகுதியில், அரசு பள்ளியில் சாதி தீண்டாமை நிலவுவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தை மாணவர்களுடன் வந்து பெற்றோர் முற்றுகையிட்டனர். முகிழ்நத்தம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், சமையல் வேலை செய்யும் பெண், சாதிய பிரச்சினைகளை மனதில் கொண்டு செயல்படுவதாகவும், மாணவர்களிடம் சாதி குறித்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கிராம மக்கள் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர், பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்