அண்ணியுடன் நெருக்கம் ..மனைவியின் கதையை முடித்த கணவன்..சேலையில் தொங்கிக்கிடந்த மனைவி..

Update: 2023-08-29 05:40 GMT

கமுதி அருகே அண் ணி உடன் தொடர்புப்படுத்தி பேசி வந்த மனைவியை, கணவனே கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழராமநதியை சேர்ந்த சரத்குமாரின் மனைவி சுவேதா, சேலையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சுவேதா தற்கொலை செய்து கொண்டதாக சரத்குமார் கூறிய நிலையில், அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. சரத்குமார், தனது அண்ணன் மனைவியுடன் போனில் பேசி வந்ததை, சுவேதா கண்டித்துள்ளார். பின்னர் சுவேதா அவரது அண்ணியுடன் நேரில் சண்டையிட்ட நிலையில், சரத்குமார் தனது அண்ணியுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இருப்பினும் சுவேதா, இருவரையும் தொடர்புபடுத்தி பேசி வந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில், சுவேதா சேலையை கழுத்தில் இறுக்கிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறியுள்ளார். அப்போது சரத்குமார் ஆத்திரத்தில் கொடிக்கயிற்றை கழுத்தில் இறுக்கி, சுவேதாவை கொலை செய்துள்ளார். பின்னர் தனது மனைவி தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடியுள்ளார். விசாரணையில் வெளிவந்த தகவல்களையடுத்து, சரத்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்