பொள்ளாச்சி அருகே சாலையைக் கடக்க முயன்ற நீதிபதி உயிரிழந்த சம்பவத்தின், சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளன. நீலகிரி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில், கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் கருணாநிதி. இவர், உடுமலை அருகே சின்னாம்பாளையத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை, கடந்த செவ்வாய்க்கிழமை கடக்க முயன்ற போது, இருசக்கர வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய கஞ்சம்பட்டி கே. நாகூரைச் சேர்ந்த வஞ்சிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், விபத்து தொடர்பான நெஞ்சை பதற வைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளன...