சென்னை அருகே ஹோலி கொண்டாடியபோது நபர் பலி - அதிர்ச்சி சம்பவம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே, ஹோலி பண்டிகை கொண்டாடிய நேபாள நாட்டைச் சேர்ந்தவர், அதீத மது போதையால் உயிரிழந்தார். நேபாள நாட்டைச் சேர்ந்த குவாட் முஹரத் என்பவர், தனது நண்பர்களுடன் நெமிலி பகுதியில் தங்கி, தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இதனிடையே, நண்பர்களுடன் சேர்ந்து ஹோலி பண்டிகை கொண்டாடியபோது, அதிக அளவில் அவர் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மதுபோதையில் மயக்கமடைந்து சரிந்து விழுந்த குவாட் முஹரத், உயிரிழந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்