இரட்டை இலை சின்னம்.. - மீண்டும் சிக்கல் - தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி மனு
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக அவர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், 2017 ம் ஆண்டு தேர்தல் ஆணையம் அளித்துள்ள உத்தரவில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு மட்டுமே அதிமுகவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, Form A மற்றும் Form B படிவத்தை வழங்கி கையெழுத்திட அதிகாரம் வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால், ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாத வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.