இன்று விசாரணைக்கு வரும் ஓ.பி. ரவீந்திரநாத்தின் மேல்முறையீட்டு மனு "உயர்நீதிமன்றம் தீர்ப்பு என்னவாகும்?"

Update: 2023-08-04 06:52 GMT

தேனி மக்களவைத் தொகுதி வெற்றி செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, அத்தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து, அத்தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், வேட்பு மனுவில் சொத்து, கடன், வருமானம் மற்றும் பொறுப்புகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும், முறையற்ற வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது தவறு என்றும் கூறி, ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என, கடந்த 6-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்நிலையில், இந்த தீர்ப்பை ரத்து செய்யவும், தனது மனுவை விசாரித்து முடிக்கும் வரை தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் ஓ.பி. ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்தார். அந்த மனு, நீதிபதிகள் சூர்யகாந்த், தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்