ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்ட யானை, புறா... உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Update: 2024-05-11 11:28 GMT

உதகையில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, 19வது ரோஜா கண்காட்சி நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி, வரும் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கண்காட்சியின் சிறப்பு அம்சமாக 80,000 ரோஜா மலர்களைக் கொண்டு வன உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் "SAVE WILD LIFE" என்ற வாசகத்தோடு யானை, காட்டு எருமை, மான், நீலகிரி வரையாடு, புலி, பாண்டா கரடி, புறா போன்றவை வடிவமைக்கபட்டுள்ளன. இவற்றை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்