அனைத்து பெண்களுக்கும் சுதந்திர தின பரிசு கொடுத்த ஒடிசா...... என்ன பரிசு தெரியுமா?
ஒடிசாவில் சுதந்திர தின பரிசாக, பெண் ஊழியர்களுக்கு ஒரு நாள் மாதவிலக்கு விடுப்பு வழங்கப்பட வேண்டும் என அம்மாநில அரசு கொள்கை முடிவை அறிவித்துள்ளது.
அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் 1992 ஆம் ஆண்டே பெண் பணியாளர்களுக்கு 2 நாள் மாதவிலக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டுவிட்டது. 2023 ஆம் ஆண்டு கேரளாவில் உயர்கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு மாதவிலக்கு விடுமுறை கட்டாயமாக்கப்பட்டது. தேசிய அளவில் எந்த சட்டமும் இல்லாத நிலையில், பீகார், கேரளா வரிசையில் ஒடிசா அரசு ஒருநாள் மாதவிலக்கு விடுப்பை அறிவித்துள்ளது.