திடீர் அறிவிப்பால் பேரதிர்ச்சியில் மக்கள்... ஒரு முடிவுக்காக காத்திருக்கும் பல குடும்பங்கள்

Update: 2024-10-04 08:04 GMT

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மூன்று தலைமுறைகளாக மக்கள் வாழ்ந்து வந்த 73 ஏக்கர் நிலம் காப்புக்காடாக மாற்றி அரசிதழில் வெளியிடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேவர் சோலை ஊராட்சிக்குட்பட்ட செறுமுள்ளி பகுதியில் ஏராளமான பழங்குடி குடும்பங்கள் மூன்று தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இந்த சூழலில், செறுமுள்ளி கிராமத்தில் உள்ள 73.5 ஏக்கர் நிலம் காப்பு வனப்பகுதியாக மாற்றப்பட்டதாக அரசிதழில் வெளியிடப்பட்டு, கிராமத்தில் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன. எந்தவித முன்னறிவிப்புமின்றி குடியிருப்பு பகுதி காப்பு காடாக மாற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பெரும்பாலானோர் தென்னை, மிளகு, காபி விவசாயம் செய்து வரும் நிலையில், காப்பு காடாக மாற்றப்பட்டால், கடுமையாக பாதிக்கப்படுவோம் என கவலை தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்