`இது என்ன புதுசா இருக்கு' - பாக்குற இடம் எல்லாம் இதான் -"கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற பழம்"
குன்னூர் பகுதியில் அதிகமான இடங்களில், ஊட்டி ஆப்பிள் எனப்படும் பச்சை ஆப்பிள் சீசன் துவங்கியுள்ளது. குன்னூர்
சிம்ஸ் பூங்கா பழவியல் நிலையத்தில் உள்ள மரங்களில் பச்சை நிறங்களில், ஊட்டி ஆப்பிள் விளைந்துள்ளது. சிம்லா, காஷ்மீர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஆப்பிள்களின் வண்ணங்களை போல் அல்லாமல் இவ்வகை
ஆப்பிள் பச்சை நிறத்திலேயே காணப்படுவது தனி சிறப்பு. இந்த வகை ஆப்பிளின் சுவையில் இனிப்பு இருக்காது. புளிப்பு அதிகமாக இருக்கும். இவ்வகை ஆப்பிள் கர்ப்பிணிகளுக்கு
பலன் அளிக்கிறது.