`ஸ்கூலுக்கு டெய்லி 6கிமீ நடந்தே போறோம்.. ஆத்திர, அவசரத்துக்கு கூட பஸ் இல்ல..' குமுறும் மாணவிகள்

Update: 2024-09-12 17:14 GMT

திருச்செங்கோடு, காளிப்பட்டி சுற்றுட்டார கிராம மக்கள், தங்களுக்கு பேருந்து வசதி செய்து தரப்படவில்லையென குற்றம்சாட்டியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த காளிப்பட்டி அருகே உள்ள குறுக்கலாம் பாளையம், அம்மாபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இப்பகுதியில் உள்ளனர். சுற்றுவட்டார கிராமங்களில் பேருந்து வசதியில்லாத நிலையில் வெளியூர்களுக்கு செல்ல, பேருந்து வசதிக்காக மல்லசமுத்திரம் செல்ல வேண்டியுள்ளது. உயர்நிலை பள்ளி மல்லசமுத்திரத்தில் உள்ளதால், பள்ளி மாணவர்கள் காலை, மாலையென 6 கிலோ மீட்டர் நடக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில், கிராம மக்கள் பல முறை துறை சார்ந்த அலுவலர்களிடம் மனு அளித்தும், கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லையென குற்றம் சாட்டியுள்ளனர். பள்ளிக்கு நடந்து செல்வதால் கால தாமதம் ஏற்படுவதாகவும், விரைவில் பேருந்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்