மாயமான மனநலம் பாதித்த பெண்... பிறந்த நாளில் நடந்த மேஜிக் - குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்த ஆச்சர்யம்

Update: 2024-10-03 12:19 GMT

மாயமான மனநலம் பாதித்த பெண்... பிறந்த நாளில் நடந்த மேஜிக் - குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்த ஆச்சர்யம்...

#Tiruppur #TNPolice

கோபி அருகே வீட்டிலிருந்து காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட பெண் 3 மாதங்களுக்கு பிறகு தனது பிறந்தநாளில் குடும்பத்துடன் சேர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் விஜயபுரம் பகுதியை சேர்ந்த திலகவதி, மனநலம் குன்றிய தனது தங்கை மாணிக்கவள்ளியை பராமரித்து வந்துள்ளார். 3 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் சென்று விட்டு பேருந்தில் திரும்பியபோது மாணிக்கவள்ளி மாயமானதாக கூறப்படுகிறது. மாணிக்கவள்ளியை உறவினர்கள் தேடிவந்த நிலையில், சாலையில் சுற்றி திரிந்த அவரை அட்சயம் ஆதரவற்றோர் காப்பகத்தை சேர்ந்தவர்கள் மீட்டு அடைக்கலம் அளித்தனர். இது தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அதனை அறித்த திலகவதி காப்பகத்திற்கு சென்று மாணிக்கவள்ளியை வீட்டிற்கு அழைத்து வந்தார். மேலும் மாணிக்க வள்ளிக்கு பிறந்தநாள் என குடும்பத்தார் மூலம் தெரிந்து கொண்ட காப்பகத்தை சேர்ந்தவர்கள் கேக் வெட்டி அவருக்கு பிறந்தநாள் பரிசளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்