வித விதமா ரக ரகமா...உழைக்கிறது ஒருத்தன் திங்கிறது யாரோவா? - நீங்க எல்லாம் யாரு சாமி
பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குன்னம் மங்களமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போய்க்கொண்டே இருந்தன. இதுக்குறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்த நிலையில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 15 லட்சம் மதிப்பிலான 18 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.