பெண் போலீஸ் கணவர் மர்ம மரணம் - கதறிய உறவினர் சொன்ன பகீர் தகவல்

Update: 2024-12-27 14:51 GMT

திருவண்ணாமலையில், பெண் காவலரின் கணவர் மர்மான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி பெண் காவலர் மீது உயிரிழந்தவரின் உறவினர்கள் புகாரளித்தனர்.

செங்கம் அடுத்த கொட்டாவூர் பகுதியை சேர்ந்த பால் விற்பனையாளரான விஜய்க்கும், பெண் காவலர் சுகன்யா என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. ஓரிரு மாதத்தில் தம்பதியினர் செங்கத்தில் உள்ள திருவள்ளுவர் நகரில் குடியேறியுள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு வழக்கம் போல் பணி முடித்து வீடு திரும்பிய விஜய் உயிரிழந்து விட்டதாக அவரது உறவினர்களுக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவமனையில் அவரது உடலை கண்டு கதறியழுத உறவினர்கள், விஜய்யின் இறப்பில் சந்தேகமிருப்பதாக கூறி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் காவலர் மீது புகாரளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்