ரத்தம் தெறிக்க... பெண் கொடூர கொலை... கொலையாளிக்கும் கழுத்தில் விழுந்த குத்து - பழனியில் அதிர்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த பஷீராபேகம் பழனி சன்னதி வீதியில் துணி மற்றும் டீக்கடை நடத்தி வந்தார். 45 வயதான இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கணவர் இறந்துவிட்ட நிலையில் பஷீராபேகத்திற்கும் பக்கத்தில் சலூன் கடை வைத்துள்ள மாரிமுத்து என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பஷீராபேகத்தை மாரிமுத்து கத்தியால் குத்தி கொலை செய்தார். அப்போது மாரிமுத்துவுக்கும் கழுத்தில் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த மாரிமுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.