கடை வைத்திருப்பவர்களே உஷார்... இவருக்கு நடந்தது உங்களுக்கும் நடக்கலாம் - வெளியான ஷாக் வீடியோ

Update: 2024-12-27 16:22 GMT

ராசிபுரம் அருகே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிபோல் நடித்து, கடைகளில் ஒருவர் பணம் பறிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பட்டணம் பகுதியில் உள்ள பல்வேறு கடைகளுக்கு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எனக்கூறி, செந்தில்குமார் என்பவர் சென்று, குட்கா உள்ளதா என சோதனை செய்துள்ளார். பேபி என்பவரது கடையில் எதுவும் கிடைக்காத நிலையில், கடையை சீல் வைக்கப்போவதாக கூறி 30 ஆயிரம் ரூபாய் கேட்டு பேரம் பேசியுள்ளார். பின்னர், 10 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு, தான் கொண்டு வந்த பொருட்களை வைத்து போட்டோ எடுத்துக்கொண்டும், பொருட்களை எடுத்துக்கொண்டும் சென்றதாக கடை உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அருணிடம் கேட்டதற்கு, அதுபோன்று யாரும் இல்லை என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்