திருடனை DSP என நம்பிய Dy. தாசில்தார்... அடுத்து அரங்கேறிய சம்பவம்... ஈரோட்டை அதிர வைத்த டீம்

Update: 2024-12-27 16:07 GMT

ஈரோடு மாவட்டத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக நடித்த ஆசாமி துணை வட்டாட்சியரிடம் 2 கோடியே 30 லட்சம் ரூபாயை பணமோசடி செய்துள்ளார்.

பெருந்துறையை சேர்ந்த சுந்தராம்பாள், நசியனூர் பகுதியில் துணை வட்டாட்சியராக உள்ளார். இவரிடம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் என அறிமுகப்படுத்திக்கொண்ட கார்த்திகேயன் என்பவர் சுந்தராம்பாளின் மகனுக்கு வருமான வரித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதற்காக, 2 கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தையும் வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுந்தராம்பாள், பெருந்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரித்த போலீசார், கார்த்திகேயன் மீது ஏற்கனவே நான்கு திருட்டு வழக்குகள் இருப்பதை கண்டு பிடித்தனர். இந்த மோசடி தொடர்பாக ஐந்து பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 4 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான கார்த்திகேயனுக்கு போலீசார் வலைவீசியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்