தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்த தாய் - ஆற்றில் சடலமாக கிடந்த மகன் - தர்மபுரி அருகே மர்ம மரணம்
மொரப்பூர் அடுத்த தொட்டம்பட்டி கிராமத்தில், தூக்கிட்ட நிலையில் சுமார் 46 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத பெண்ணும், ரத்த காயங்களுடன் இளைஞர் ஒருவரும், ஆற்று நீரில் சடலமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு வந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான விசாரணையில், உயிரிழந்த இருவரும் மொரப்பூர் அடுத்த கசியம்பட்டி கிராமத்தை சேர்ந்த காவேரி என்பவரின் மனைவி செல்வி மற்றும் அவரது மகன் மோகன்ராஜ் என தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையா? தற்கொலையா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.