அமைச்சர் உதயநிதியை மகன் என்று அழைத்த மூதாட்டி.. 6 பிள்ளைகள் இருந்தும் நடுரோட்டில்

Update: 2024-09-09 12:18 GMT

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதியிடம் தன் கணவர் இறந்து 16 வருடங்கள் ஆகியும் பென்ஷன் வரவில்லை என மூதாட்டி ஒருவர் அழுது முறையிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள மதுரை வந்துள்ள அமைச்சர் உதயநிதி மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்... அப்போது மூதாட்டி ஒருவர் கண்ணீர் மல்க முறையிட்ட நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உதயநிதி உறுதியளித்தார். அமைச்சர் உதயநிதியை மகன் என அழைத்த மூதாட்டி, அவர் வரும் வரை காத்திருந்து கோரிக்கை வைத்ததாகத் தெரிவித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்