எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கை.. வெளியான அதி முக்கிய அறிவிப்பு

Update: 2024-08-27 08:14 GMT

எம்பிபிஎஸ் - பிடிஎஸ் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்றுள்ள மாணவர்கள், கல்லூரிகளை ஆன்லைனில் பதிவு செய்ய இன்று மாலை வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.தமிழக அரசு இட ஒதுக்கீட்டின் கீழ், எம்பிபிஎஸ்- பி.டி.எஸ். இடங்களில் சேர்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 21-ம் தேதி தொடங்கியது. பொதுப்பிரிவில் இடம்பெற்றுள்ள 28 ஆயிரத்து 819 மாணவர்கள் இதில் பங்கேற்று, விரும்பும் கல்லூரிகளை இணையதளம் வழியாக பதிவு செய்து வருகின்றனர். இதற்கு, இன்று மாலை 5 மணி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளை மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், 29-ம் தேதி தற்காலிக முடிவுகள் வெளியிடப்பட்டு, 30-ம் தேதி இறுதி முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இறுதியாக ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள், செப்டம்பர் 5-ம் தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டுமென மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பொறுத்தவரை, தரவரிசை மதிப்பெண் 720-ல் தொடங்கி, 127 வரையிலான மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை பொறுத்தவரை, நீட் மதிப்பெண் 715 முதல், 127 வரையிலான 13 ஆயிரத்து 417 மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்