மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம் - 2 டன் மலர் மாலை அலங்காரம்... 1 லட்சம் பேருக்கு விருந்து
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்வை ஒட்டி வெட்டிவேர், நறுமண மலர்களால் திருக்கல்யாண மேடை அலங்கரிக்கப் பட்டிருந்தது... மேடை முழுவதும் 2 டன் அளவிற்கு பல்வேறு வகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது... சுந்தரேஸ்வரர் - மீனாட்சியம்மன் தனித்தனி வாகனங்களில் மேடையில் எழுந்தருளினர். புதுப்பட்டு உடுத்தி திருவாபரணங்கள் பூண்டு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் காட்சியளித்தனர். திருக்கல்யாண நிகழ்வுக்காக 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்... முக்கிய பிரமுகர்கள் உள்பட மொத்தம் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.திருக்கல்யாண நிகழ்வைக் கண்டு ரசிக்க கோவில் வளாகத்தைச் சுற்றிலும் 20 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன... பக்தர்கள் புடைசூழ சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மன் கழுத்தில் மங்கல நாண் அணிந்து திருக்கல்யாணம் இனிதே நடந்தேறியது... அந்த சமயத்தில் பெண்களும் தங்கள் கழுத்தில் மங்கல நாண் அணிந்து மகிழ்ந்தனர்...