தங்கையை கழுத்தை நெரித்துக் கொன்ற அண்ணன்... கள்ளக்காதலனோடு சென்றதால் பயங்கரம்...

Update: 2024-08-07 17:45 GMT

உடன் பிறந்த அண்ணை காண்பதற்காக ஓடோடி வந்த தங்கை கொடூரமாக் கொலை செய்யபட்டுக் கிடந்த தகவல் ஊர் முழுக்க பரவி இருந்தது..

ஒரு சிறிய சந்துக்குள் இருந்து, துணியால் போர்த்தப்பட்ட சடலத்தை போலீசார் மீட்டு வந்தனர்.

சொந்த தங்கையையே சுவற்றில் அடித்துக் கொலை செய்துவிட்டு,

காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறார் அந்த பாசக்கார அண்ணன்.

இரண்டு பிள்ளைகளுக்கு தாயான தங்கையை, அண்ணே கொடூரமாக கொலை செய்ய காரணம் தகாத உறவு..

மதுரை மாநகர் கீரைத்துறை மேலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் திலகவதி.

36 வயதான இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் கண்ணன் என்பவரோடு திருமணம் நடந்திருக்கிறது.

ராணுவ வீரரான கண்ணன், திருமணம் ஆனது முதலே மனைவி மீது கொள்ளைப்பிரியமாக இருந்திருக்கிறாரர். விடுமுறைக்கு ஊருக்கு வரும் போதெல்லாம மனைவியை கண்னும் கருத்துமாக பார்த்து அன்யோனியமாக இருந்து வந்திருக்கிறார்.

மனைவி மீது கண்ணனுக்கு எந்த அளவுக்கு பாசம் இருந்தது என்றால், தன் பெயரில் இருந்த சொத்துக்கள் அனைத்தையும் அவரது பெயருக்கே எழுத்தி வைத்திருக்கிறார்.

இப்படி மனைவியே உற்ற துணை என இருந்த கண்ணனின் நெஞ்சில் ஈட்டியை இறக்கியது திகவதியின் தில்லாலங்கடி வேலை.

கணவன் ஊரில் இல்லாத போது, திலகவதிக்கு ஜெய்ஹிந்த் புரத்தை சேர்ந்த ஒருவரோடு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே திருமணமான அந்த நபர் தனது மனைவிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு திலகவதியோடு,

வாட்ஸ் அப் சேட்டிங், வீடியோ கால் என நேரத்தை கழிக்க, ஒரு கட்டத்தில் இருவரும் ரகசியமாக சந்தித்து, தனிமையில் இருந்திருக்கிறார்கள்.

மனைவியின் ரகசிய காதல் தெரியவரவே கண்ணன் மனம் உடைந்து போயிருக்கிறார். மனைவியின் துரோகத்தை நினைத்து ஆத்திரமடைந்தாலும், பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு,

மனைவிக்கு பக்குவமாக எடுத்துச் சொல்லி புரியவைக்க நினைத்திருக்கிறார். ஆனால் திலகதி கணவனின் பேச்சை கேட்பதாக இல்லை.

இதனால் திருமண உறவை சுமூகமாக முறித்து கொள்ள நினைத்த கண்ணன், தான் கொடுத்த சொத்துக்களை திருப்பிக் கேட்டிருக்கிறார்.

ஆனால் திலகவதியோ திரும்ப எழுதி கொடுக்காமல் ஏமாற்றி வந்திருக்கிறார்.

இந்த நிலையில் தான் கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறிய திலகவதி பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு, காதலனோடு சென்றுவிட்டார்.

இந்த விஷயம் திலகவதியின் அண்ணன் தமிழ்ராஜாவுக்கு தெரியவந்திருக்கிறது. குடும்ப மானத்தை கப்பலேற்றிய திலகவதியை, அவர் பங்கிற்கு கண்டித்து பார்த்திருக்கிறார், ஆனால் அவர் கேட்பதாக இல்லை.

மை லைஃப் மை ரூல் என ஆடிடியூட் காட்டிய தங்கச்சியை, சமாதானம் பேசுவது போல சம்பவத்தன்று வீட்டிற்கு வர வைத்திருக்கிறார் தமிழ்ராஜா.

அங்கு வைத்து இறுதியாக எச்சரிக்கை கொடுக்க, திலகவதி அவரது முடிவை மாற்றிக் கொள்வதாக இல்லை. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்ராஜா திலகவதியை சரமாரியாக அடித்திருக்கிறார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழவே ,

அதன் பிறகு ஒரு கயிரால் கழுத்தை இறுக்கி கொலை செய்து தூக்கில் தொங்க விட்டிருக்கிறார்.

திலகவதி துடிதுடித்து இறந்து சடலமாக தொங்கிக் கொண்டிருந்த நிலையில், தமிழராஜாவே காவல் நிலையத்திற்கு தகவலும் கொடுத்திருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்ராஜாவை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

நல்ல வாழ்கை கிடைத்தும் தீய நட்பால் தவறவிட்ட திலகவதியை, இறுதிவரை கண்ணியம் குறையாமல் கவனித்து வந்திருக்கிறார் அவரது கணவர். ஆனால் சொத்தையும் சேர்த்து அபகரிக்க வேண்டுமென்ற திலகவதியின் பேராசையும் தவறான நடத்தையும், அவர் உயிருக்கு எனமானது மட்டுமல்லாமல், இரண்டு குழந்தைகளை தாயில்லா பிள்ளைகளாக்கி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்