கூடங்குளம் அணுமின் நிலையம்... ஜெனரேட்டர் இணைப்பு துண்டிப்புதரை தட்டிய கப்பலால் பரபரப்பு

Update: 2023-09-10 01:59 GMT

நெல்லை கூடங்குளத்தில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில், மேலும் 4 அணு உலைகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 3 மற்றும் 4வது அணு உலைக்கான ஜெனரேட்டர், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கூடங்குளத்திற்கு கடல் வழியாக மிதவையில் இழுவை கப்பல் மூலம் இழுத்து வரப்பட்டது. அப்போது கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே சில நாட்டிகல் மைல் தூரத்தில் இழுவை கப்பல் வந்து கொண்டிருந்த போது அதன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மிதவை, கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு அங்குள்ள பாறையில் தட்டி கப்பல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதனை மீட்கும் பணியில் அணுமின் நிலையத்தினர் மற்றும் கடலோர குழுமத்தினர் ஈடுபட்டுள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்