அடுத்தடுத்து நடக்கும் அதிரடி ரெய்டு...கிலோ கணக்கில் சிக்கிய பதப்படுத்தப்பட்ட சிக்கன் | Food Safety
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் செயல்பட்டு வரும் 10 அசைவ உணவகங்களில் கள்ளக்குறிச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எதிர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஏற்கனவே சமைக்கப்பட்டிருந்த உணவுகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பதப்படுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 62 கிலோ பதப்படுத்தப்பட்ட சிக்கன், 6 கிலோ பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த மட்டன், 15 லிட்டர் மயோனைஸ், 25 கிலோ ரைஸ், 15 கிலோ நூடுல்ஸ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.