ஆபரேஷன் தியேட்டருக்குள் இருந்து வாயில் பஞ்சுடன் வந்த சிறுமி - கதறி துடித்த பெற்றோர்

Update: 2024-05-17 11:15 GMT

கோழிக்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமிக்கு கையில் 6 விரல்கள் இருந்த நிலையில், 6வது விரலை அறுவை சிகிச்சை செய்து அகற்ற சிறுமியைப் பெற்றோர் கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்... அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு அறுவை சிகிச்சைக்கான அரங்கிற்குள் அழைத்துச் சென்றனர்... அறுவை சிகிச்சை முடிந்து வெளியில் அழைத்து வரப்பட்ட சிறுமியைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்... ஏனெனில் சிறுமிக்கு வாயில் பஞ்சு வைக்கப்பட்டிருந்தது... என்ன ஏதென்று விசாரித்த போதுதான், சிறுமிக்கு நாக்கில் பிரச்சினை இருப்பதாகக் கூறி அறுவை சிகிச்சை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது... பிறகு தவறுதலாக அறுவை சிகிச்சை செய்ததை உணர்ந்த மருத்துவர்கள் மீண்டும் சிறுமியை அழைத்துச் சென்று 6வது விரலை அகற்றினர். மருத்துவ கல்லூரி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் அளித்த நிலையில் உரிய விளக்கம் அளிக்குமாறு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டார்... அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் பிஜோன் ஜான்சன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஏற்கனவே இதே மருத்துவமனையில் ஒரு பெண்ணிற்கு வயிற்றில் அறுவை சிகிச்சை முடிந்து கத்திரிக்கோலை வைத்து தைத்த சம்பவம் நடந்து விசாரணை நடைபெற்றது... இந்த சமயத்தில் சிறுமிக்கு விரலுக்கு பதில் நாக்கில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்