சிங்கப்பூரில் இருந்து வந்ததும் மனைவியை தீர்த்து கட்டியதுடன் தடயம் இல்லாமல் அழிந்த கணவன் - போலீசை அதிரவிட்ட பின்னணி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், மனைவியை கத்தியால் குத்தி விட்டு கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி பாண்டியன் நகரை சேர்ந்தவர் திருஞான சம்பந்தம். சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த இவருக்கு சரண்யா என்பவருடன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திருஞ்சான சம்பந்தம் விடுமுறையில் சொந்த ஊர் வந்திருக்கிறார். வந்த சில நாள்களிலே தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறானதாக சொல்லப்படுகிறது. இந்த தகராறில், மனைவியை கத்தியால் தாக்கிய திருஞான சம்பந்தம், பின் தன் அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே, கடந்த சில வருடங்களாக திருஞான சம்பந்தம் மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இதற்காக அவர் சிகிச்சைகள் மேற்கொண்டு வந்ததாகவும் சொல்லப்படும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...