ஸ்டேஷனில் நிற்காமல் சென்ற ரயில்... புக்கிங் செய்து காத்திருந்த பயணிகளுக்கு பேரதிர்ச்சி

Update: 2024-07-09 08:34 GMT

ஸ்டேஷனில் நிற்காமல் சென்ற ரயில்... புக்கிங் செய்து காத்திருந்த பயணிகளுக்கு பேரதிர்ச்சி

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் சிறப்பு விரைவு ரயில் நிற்காமல் சென்ற விவகாரத்தில், லோகோ பைலட் 2 பேர் ச‌ஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை ரயில் நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம் புறப்பட்டு சென்ற வாராந்திர சிறப்பு ரயில், வழக்கமாக நின்று செல்லும் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றது. இதனால், முன்பதிவு செய்த 55 பயணிகள் ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, ஈரோடு செங்கோட்டை எக்ஸ்பிரஸ் மூலம் தென்காசிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில், லோகோ பைலட் விஷ்ணு, உதவி லோகோ பைலட் சண்முக வேலாயுதம் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், துறை ரீதியான விசாரணையை தென்னக ரயில்வே மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில், கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் போதுமான சிக்னல் வசதி இல்லை என்றும், ரயில்வே சார்பில் வழங்கப்பட்டுள்ள அப்ளிகேஷனில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் குறித்த தரவு இல்லாத‌தாலேயே நிற்காமல் சென்றதாகவும் ரயில்வே ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்