#BREAKING || வழிவிடாததால் ஆத்திரம்.. தேசிய நெடுஞ்சாலையில் சட்டையை கிழித்து சண்டை.. பரபரப்பு காட்சி
உளுந்தூர்பேட்டை அருகே ஒலையனூர் மற்றும் குணமங்கலம் கிராம மக்களிடையே மோதல். போலீசார் முன்னிலையில் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கி கொண்டதால் பரபரப்பு. ஓலையனூர் வழியாக சென்ற குணமங்கலம் இளைஞர்களை, ஓலையனூர் இளைஞர்கள் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் என தகவல். இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டதில் அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைப்பு. 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. இரு தரப்பினரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பதற்றமான சூழல் - போலீஸ் குவிப்பு.