"ரொம்ப கஷ்டப்பட்டோம், இப்போ.." பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. டிக்கெட் போடுவதற்கு முன்.. இத பாருங்க!

Update: 2024-08-18 12:53 GMT

தாம்பரம் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணி நிறைவடைந்த நிலையில், மின்சார ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

இந்த சீரமைப்பு பணி கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல்18ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு 63 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு சென்றன. சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டத்தில் செல்கின்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்தில் நிற்காமல் சென்றது. இந்நிலையில் தாம்பரத்தில், புதிதாக ஒன்பது, 10-வது பிளாட்பாரம் அமைக்கும் பணி, ஏழு, 8-வது பிளாட்பாரங்களில் அகலப்படுத்தும் பணி தொடங்கியது. எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்தை அதிகரிக்க புதிதாக தண்டவாளம் அமைக்கும் பணிகளை ரயில்வே துறையினர், திட்டமிட்டபடி இன்று 12 மணிக்குள் முடித்தனர். இதையடுத்து ரயில் சேவை தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்