யாத்திரையில் சுவாரஸ்ய சம்பவங்கள்..."அண்ணாமலையை தோளில் தூக்கி செங்கோல் கொடுத்த தொண்டர்கள்"
பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை, திருப்பரங்குன்றம் தொகுதியில் யாத்திரை மேற்கொண்டபோது, பா.ஜ.கவினர் செங்கோல் பரிசளித்தனர்.
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின், என் மண்; என் மக்கள்; யாத்திரை இன்று திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற்றது. யாத்திரையின்போது அண்ணாமலைக்கு பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் 3 அடி வாளை பரிசாக வழங்கினார்.
திருப்பரங்குன்றத்தில் மீன் கடை நடத்தி வரும் பாப்பாத்தி என்பவர் கோரிக்கை மனு அளித்தார். அப்போது, அங்கிருந்த சிறுவர்களுக்கு அண்ணாமலை பட்டை அடித்தார். பின்னர், அங்கிருந்த கட்சியினர், அண்ணாமலையை தோளில் தூக்கினர். இதையடுத்து, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயிலுக்கு சென்று அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கு இருந்த பக்தர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அங்கிருந்து புறப்படும்போது அண்ணாமலைக்கு, கட்சியினர் செங்கோல் பரிசளித்தனர்.