பணக்கார வாழ்கை கொடுத்த `வழுக்கை’ -வாட்டமான தலையில் விதவிதமா..ரகரகமா..கொட்டோ கொட்டுனு கொட்டிய பண மழை!

Update: 2024-09-15 05:52 GMT

வித விதமாக விக் அணிந்து மாறுவேடத்தில் திருடி போலீசுக்கு போக்கு காட்டி வந்த பலே திருடன் வசமாக பிடிபட்ட கதையை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

முடி இருப்பவர்கள் கூட இத்தனை வித ஹேர் ஸ்டைல் வைக்க முடியாது...

ஆனால் தனது வழுக்கைத் தலையில் ரகம் ரகமாக "விக்" மாட்டி தசாவதாரம் கமலைப் போல கெட்டப் போட்டு... பல வீடுகளில் கைவரிசை காட்டியுள்ளார் இந்த பலே ஆசாமி...

தலை வழுக்கை விழுந்து விட்டதாக குறை கூறுபவர்களைத் தானே பார்த்திருப்போம்...

ஆனால், தனது வழுக்கைத் தலையை வைத்தே கோடீஸ்வரர் ஆகும் முயற்சியில் இறங்கிய இந்த ஆசாமி யார்?..

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே தொடர் திருட்டுகள் அரங்கேறின...

திருடனைப் பிடிக்க முடியாமல் திணறிப் போயினர் போலீசார்...

கண்காணிப்பைத் தீவிரப்படுத்திய காவல் துறையினர், குடியாத்தம் அடுத்த கார்த்திகேயபுரம் பேருந்து நிலையம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்...

அப்போது இரு சக்கர வாகனத்தில் ஒரு தினுசாக வந்த ஆசாமியைப் பிடித்து விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்...

அலேக்காக காவல் நிலையம் தூக்கிச் சென்று விசாரித்ததில்... அவர் பெயர் காடை மோகன் என்ற மோகன் என்பதும்... ஏற்கனவே கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது...

பல காவல் நிலையங்களில் இவர் மீது 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போயினர் போலீசார்...

தொடர்ந்து நடத்திய விசாரணையில், சென்னராயனப்பள்ளி பகுதியில் சில நாள்களுக்கு முன்பு பள்ளி முதல்வர் ஒருவர் வீட்டில் திருடியதும், பசுமாத்துர் மற்றும் வளத்தூர் பகுதிகளில் கைவரிசை காட்டியதும் இதே ஆசாமி தான் என்பது தெரிய வந்தது...

இதையடுத்து மோகனிடம் இருந்து 56 கிராம் தங்கம்... 500 கிராம் வெள்ளி... இருசக்கர வாகனம்...எல் இ டி டிவி... சுவர் கடிகாரம்... கேஸ் ஸ்டவ் என பறிமுதல் செய்த போலீசார் அவரைக் கைது செய்தனர்...

இவ்வளவு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டும் இவர் மாட்டாமல் இருந்தது தலையில் மாட்டியிருந்த "விக்"கால் தான்...

தனது வழுக்கைத் தலைக்கு வாட்டமாக ஒவ்வொரு இடத்திற்கும் வெவ்வேறு விதமான விக்கை அணிந்து சென்றதால் அவரை அடையாளம் காண்பதில் போலீசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது...

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல, வழுக்கைத் தலையை வித்தியாசமாக பயன்படுத்தி கைவரிசையை காட்டி இருக்கிறார், இந்த பலே திருடன்...

Tags:    

மேலும் செய்திகள்