மகா தீபத்திற்காக ராட்சத கொப்பரை.. 6.5 அடி உயரத்தில் பதிக்கப்பட்ட உருவம்.. அரோகரா கோஷத்துடன் மக்கள்
கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி, திருவண்ணாமலை மலை உச்சிக்கு மகா தீபக் கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. பஞ்ச லோகத்தால் 6.5 அடி உயரத்தில் செய்யப்பட்ட மகா தீபக் கொப்பரையில் அர்த்தநாதரீஸ்வரர் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. கிளி
கோபுரம் அருகே உள்ள நந்தி சிலை முன் வைத்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் கோயில் ஊழியர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷம் எழுப்பி தீபக் கொப்பரையை மலை உச்சிக்கு எடுத்து சென்றனர்.