ஆடு, மாடு கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மோசடி - மாவட்ட ஆட்சியரிடம் மனு

Update: 2022-10-11 02:51 GMT

ஆடு, மாடு கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மோசடி - மாவட்ட ஆட்சியரிடம் மனு 

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ஆடு, மாடு கொட்டகை அமைக்கும் திட்டத்தில் பல லட்சம் ஊழல் நடந்திருப்பதாக

குற்றச்சாட்டு எழுந்துள்ளது. என்.என்.சாடியை சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜ்பரத் என்பவர் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் இது

தொடர்பாக மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் மனு அளித்தார். அதில் கடந்த அதிமுக ஆட்சியில்,முழு மானிய திட்டத்தில் ஆடு, மாடு கட்டிய திட்டத்தில் அரசு

பணம் 74 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக, ஆர்எடிஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.

இது குறித்து தங்கள் தலைமையிலோ அல்லது நேர்மையான அதிகாரிகளை கொண்டு தனிக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்