உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை...ஓடி ஒளிந்து கொண்ட ஊழியர்கள்-சுவர் ஏறி குதித்து செக் வைத்த
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவகங்களில், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அதிகாரிகள் வருவதை தெரிந்து கொண்ட ஊழியர்கள், உணவகங்களை தார்ப்பாய்கள் கொண்டு மூடிவிட்டு உள்ளே ஒளிந்து கொண்டனர். உடனடியாக சுவரில் எகிறி குதித்த அதிகாரிகள், உணவகங்களில் நுழைந்து ஆய்வு செய்தனர். அப்போது சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பது தெரியவரவே, 2 உணவகங்களுக்கு தலா ஐந்தாயிரம் என மொத்தம் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.