கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே மாப்பிள்ளை பார்ப்பது போல் சென்று நகைகளை திருடிய 4 பெண்களை போலீசார் கைது செய்தனர். நற்சீசன் என்பவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இரண்டாவது திருமணத்திற்காக இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதையடுத்து நற்சீசனை தொடர் கொண்டு பேசிய மதுரையைச் சேர்ந்த பெண், திருமணம் செய்து கொள்வதாக கூறி தனது கூட்டாளிகளுடன் நற்சீசனின் வீட்டிற்கு சென்று 8 சவரன் நகைகளை திருடி சென்றுள்ளனர். நற்சீசன் அளித்த புகாரின் பேரில், நான்கு பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.