மலை போல் குவிந்த குப்பை.. மளமளவென பற்றிய தீ...! வானை முட்டும் கரும்புகை- அச்சத்தில் கரூர் மக்கள்

Update: 2023-08-01 17:11 GMT

கரூரில் , குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு, அரசு காலனி பகுதியில் அமைந்துள்ளது. மலைபோல் குவிந்து கிடக்கும் இந்த குப்பை மேட்டில், நேற்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் மளமளவென பற்றிய தீ கொழுந்துவிட்டு எரிந்தது. 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 10-க்கும் மேலான டேங்கர் லாரிகள் உதவியுடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். இன்று அதிகாலை முதல் ​மீண்டும்,

குப்பை மேட்டைக் கிளறி தண்ணீரைப் பீய்ச்சி அடித்து முழுவதுமாக தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கரூர் - வாங்கல் சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. நேற்று இரவு போக்குவரத்து மாற்றப்பட்ட நிலையில், இன்று காலை காவலர்கள் அப்பகுதிக்கு வராததால், வாகன ஓட்டுநர்கள் ஆபத்தை உணராமல் தடுப்புகளை மீறி அவ்வழியாகச் செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்