Toxic லவ்வரிடம் சிக்கிய பெண் வழக்கறிஞர்.. சென்னையில் பகீர் சம்பவம்

Update: 2024-02-12 12:45 GMT

நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிடப் போவதாகக் கூறி மிரட்டி வந்த முன்னாள் காதலன் மீது, பெண் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் பெண் ஒருவர், கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஜெய்கணேஷின் நடவடிக்கைகள் பிடிக்காததால், இளம்பெண் அவரை விட்டு பிரிந்துள்ளார். இதனிடையே, இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி, ஜெய்கணேஷ் இளம்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியதுடன், பாலியல் இச்சைக்கும் இணங்க மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்