ஒரே ஒரு Fake ID.. ரூ.43 லட்சத்தை பார்ட் பார்ட்டாக வாங்கிய இளைஞர்

Update: 2024-03-19 16:19 GMT

சுமார் 43 லட்சம் மதிப்பிலான ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை, போலி மின்னஞ்சல் மூலம் பெற்று கள்ள சந்தையில் விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, மீஞ்சூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர், ஸ்டீல் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வரும் நிலையில், இவரிடம் மீஞ்சூர் பாலாஜி நகரை சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவர் போலி மின்னஞ்சல் மூலம் சுமார் 43 லட்சம் மதிப்பிலான ஆட்டோ மொபைல் உதிரி பாகங்களை ஆர்டர் செய்து பெற்றுள்ளார். ஆர்டர் செய்த பொருள்களுக்கான தொகையை அப்துல் ரஹீம் திருப்பி தராத நிலையில், போலீசில் புகாரளிக்கப்பட்டது. விசாரணையில், போலி மின்னஞ்சல் மூலம் பெற்ற சுமார் 43 லட்சம் மதிப்பிலான ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை ஸ்கிரப்பராக மாற்றி அதனை கள்ளச்சந்தையில் அப்துல் ரஹீம் விற்பனை செய்தது தெரியவர, அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்