பழவேற்காடு கடற்கரை பகுதியில் எண்ணெய் கழிவுகள் பரவியதா என்பது குறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆய்வு மேற்கொண்டார்.
மிக்ஜாம் புயலின் போது சென்னை சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து கச்சா எண்ணெய் கழிவுகள் வெளியேறி கொசஸ்தலை ஆறு, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவியது. இந்தக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், எண்ணெய் கழிவுகள் பழவேற்காடு கடற்கரை பகுதியிலும் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், உரிய நிவாரணம் அளிக்க வேண்டுமெனவும் அப்பகுதியினர், மாவட்ட ஆட்சியர் பிரவு சங்கரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, பழவேற்காடு கடற்கரை பகுதியில், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில், மீன்களில் எண்ணெய் கழிவுகளின் தாக்கம் உள்ளதா என பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.