ஊசி போட்டதால் சிறுவனுக்கு இந்த நிலை ஏற்பட்டதா? - அரசு மருத்துவமனை விளக்கம்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில், கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, மருத்துவர்கள் ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஊசி செலுத்தப்பட்ட பகுதியில், சிறுவனுக்கு வீக்கம் ஏற்பட்டு கட்டியாக மாறியுள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் பிரிவில், சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை, சிறுவனுக்கு இந்த நிலை ஏற்பட்டதற்கு ஊசி காரணமாக இருக்காது என்று தெரிவித்துள்ளது. சிறுவனுக்கு செலுத்தப்பட்ட ஊசியால்தான் இந்த நிலை ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உரிய முறையில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.