நெருங்கிய நண்பனின் மனைவியுடன் தகாத உறவு.. மது அருந்தும்போது இளைஞர் செய்த கொடூர செயல்
பொம்மிடி அருகேயுள்ள ஜங்காள ஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். திருமணமாகாத இவர், தன் நெருங்கிய நண்பரான அறிவழகனின் மனைவியுடன் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அறிவழகன் மனிகண்டனை மது அருந்த அழைத்துச் சென்று அடித்துக் கொலை செய்திருக்கிறார். சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், அறிவழகன் மற்றும் மாயக்கண்ணன் ஆகியோரை வலை வீசி தேடி வந்த நிலையில், ஈரோட்டில் வைத்து மாயக்கண்ணனை கைது செய்திருந்தனர். தொடர்ந்து, தலைமறைவாக இருந்து வந்த அறிவழகன் அரூர் நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.