திடீர் திடீரென பகீர் கிளப்பும் ஒகேனக்கல்.. 8வது நாளாக வந்த உத்தரவு
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 15 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் நீர் வரத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதன்காரணமாக, 8 வது நாளாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, காவிரி ஆற்றில் நேற்று நீர் வரத்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த நிலையில், இன்று 15 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.