முதியவரை முட்டி தூக்கிய முரட்டு மாடு.. அதிர்ச்சியூட்டும் CCTV காட்சி

Update: 2024-12-15 10:02 GMT

சென்னையில், தெருவில் நடந்து சென்ற முதியவரை மாடு முட்டி தூக்கி வீசியதில் படுகாயமடைந்தார். ஏழு கிணறு பகுதியில், 80 வயதான முதியவர் ஊன்றுகோல் உதவியுடன் நடந்து சென்றார். அப்போது, மாடு ஒன்று அவரை முட்டி தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த முதியவரை பொதுமக்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே, அப்பகுதியைச் சேர்ந்த வரதன் என்ற முதியவருக்குச் சொந்தமான மாடு, முதியவரை முட்டியது தெரியவந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட முதியவரின் உறவினர்கள், ஏழுகிணறு காவல்நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே, முதியவரை மாடு முட்டி தூக்கி வீசும் அதிர்ச்சியூட்டும் காட்சி வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்