ஒற்றை வீடியோ... தமிழக காங் .,ஐ பரபரப்பாக்கிய நபர்... யார் இந்த சிவாஜி முத்துக்குமார்?

Update: 2024-10-19 15:30 GMT

மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரை பற்றி அவதூறாக பேசுவதா என, காங்கிரஸ் தொண்டர் சிவாஜி முத்துக்குமார் ஆவேசமாக வெளியிட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை வெளியிட்ட சிவாஜி முத்துக்குமார், முன்பு நெல்லை கிழக்கு மாவட்ட விவசாய காங்கிரஸ் தலைவராக பணியாற்றியுள்ளார். கோபிச்செட்டிபாளையத்தில் காமராஜர் வளைவை அகற்றியதை எதிர்த்ததால், அப்போதைய தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். காமராஜர் விஷயத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த அவர், செல்வப்பெருந்தகை மாநில தலைவராக பொறுப்பேற்ற பின், மீண்டும் காங்கிரசில் இணைந்து தற்போது தொண்டராக உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்